அதனை மறைக்க தயாரில்லை! ரமேஷ் பத்திரன கூறும் விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவுடன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பை மீறியிருந்தால், கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அப்படியான ஒழுங்கு நடவடிக்கையை எடுத்தால், அதனை எந்த பிரச்சினையும் இன்றி எதிர்கொள்ள தயார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்க நான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை வழங்கினோம்.

அதனை மறைக்க தயாரில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டணியின் உறுப்பினராக எதிர்காலத்திலும் செயற்படுவேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான நான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் விண்ணப்படிவத்தை பெற்றுக் கொண்டோமே தவிர, அந்த கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளவில்லை என ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.