பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் திருகோணமலையில் தரையிறங்கிய ரணில்

Report Print Gokulan Gokulan in அரசியல்

திருகோணமலை - கிண்ணியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூபின் மகளின் திருமண வைபவத்தில் கலந்துக் கொள்வதற்காகவே விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்றைய தினம் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களும் இத் திருமண வைபவத்தில் பங்கேற்றுள்ளனர்.

இத்திருமண வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், கபீர் காசிம் உள்ளிட்ட இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.