மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி எடுத்த அதிரடி முடிவு!

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்றும் முயற்சியில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக செயற்படுகின்றார் என்பதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் கையளிக்கப்படவுள்ளன.

மஹிந்தவின் உறுப்புரிமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் மஹிந்த அமரவீர ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இன்றையதினம் உறுதிப்படுத்தல் கடிதம் அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுள்ளமையால், அவர் எதிர்க்கட்சி தலைவராக உரிமை இல்லை என நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.

இதனால் இதனை தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கடிதம் அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தற்போது அமுலில் உள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமை பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரங்கள் பல வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.