அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் விரைவில் - ராஜித சேனாரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நுண்ணுயிர் கொல்லி மருந்து பயன்பாடு சம்பந்தமான கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் இரண்டாவது முறையாகவும் சுகாதார அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ராஜித சேனாரத்ன முதல் பணியாக இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டுள்ளார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனவரி முதலாம் திகதி முதல் அரச சேவையை கொண்டு நடத்தி செல்ல நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால், துரிதமாக அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தை கூட்டி இடைக்கால செலவு அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.