அமைச்சு பதவிகளை கேட்டவர்கள் அலுமாரியில் அடைக்கப்பட்டுள்ளனர்: சந்திம வீரக்கொடி

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவை அமைச்சு பதவிகளை கேட்டு எங்கள் அணியில் இருந்து அடுத்த பக்கம் தாவியவர்கள், அங்கும் இங்கும் தாவ முடியாதபடி அலுமாரிக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் பதவி வழங்கவில்லை என்று ஜனாதிபதியை திட்டும் முன்னர், பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் பெயர் இருக்கின்றதா என்று பாருங்கள். அப்போது உண்மையை அறிந்துக்கொள்ள முடியும். அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து சென்றவர்களை அலுமாரிக்குள் அடைத்து ரணில், ஆணி வைத்துள்ளார்.

உப்பு சப்பில்லாத அமைச்சரவையும் பிரதமருமே நாட்டில் இருக்கின்றனர். நாடு தொடர்ந்தும் இருளை நோக்கி செல்வதால், ரவி கருணாநாயக்கவுக்கு சிறந்த அமைச்சை வழங்கியுள்ளனர். இனிமேல் மின்சாரம் குறித்தும் நீண்டகால நம்பிக்கை கொள்ள முடியாது. மின்சாரம் இல்லாமல் போனால், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பெரிய பிரச்சினை ஏற்படாது.

கடந்த காலத்தில் பாடுபட்ட யானைகளை சிறிகொத்தவில் நிறுத்தியுள்ளனர். மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு சுகம் அனுபவிக்க அமைச்சு பதவிகளை கொடுத்துள்ளனர். நித்திரை விழித்து அலரி மாளிகையில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.