எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றை அல்லது இரண்டை வேறு யாரிடமாவது ஒப்படைப்பேன்

Report Print Kamel Kamel in அரசியல்

எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்று அல்லது இரண்டை வேறு யாரிடமாவது ஒப்படைக்க நேரிடும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, டிஜிட்டல் உட்கட்டுமானம், விளையாட்டு மற்றும் தொலைதொடர்பு உள்ளிட்ட நான்கு அமைச்சுக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை, அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலருக்கு கூடுதலான அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன, எனக்கு நான்கு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது அதில் ஒன்று அல்லது இரண்டை கொடுக்க நேரிடும்.

கூடுதலாக அமைச்சர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பில் ஓர் முறைமை உருவாக்கப்பட வேண்டும், இந்த விடயம் பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.

ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று அல்லது நாளை நடைபெறக்கூடிய சாத்தியம் உண்டு.

ஜனாதிபதிக்கு அதிக வேலைப்பளு என்று கூறினார், விரைவில் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.