மைத்திரியுடன் புகைப்படம் எடுக்காமல் வெளியேறிய அமைச்சர்கள்!

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் ஒன்றை எடுப்பார்கள் என்ற போதிலும் இன்றைய தினம் அவ்வாறு புகைப்படம் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அறையொன்றில் தனித் தனியாகவே இன்றைய தினம் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

வழமையாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்வது வழமையானது என்ற போதிலும் இம்முறை அவ்வாறான ஓர் நிகழ்வு நடைபெறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்ற நிலைமையே இவ்வாறான சம்பவங்களின் மூலம் அம்பலமாகின்றது.