புதிய ஜனாதிபதி தேவை! மைத்திரி செய்வாரா?

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச சட்டம் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் .இதனை கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் 7 நீதியரசர்கள், நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலை அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்க வேண்டுமாயின் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.

எந்த தேர்தல் பற்றி நாட்டு மக்கள் பேசினாலும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றின் அவசியம் தெரிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையில் இருந்து மீள ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வு எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.