இளைஞராக மாறிய ரணில்! வியந்து போன தென்னிலங்கை

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது.

இதன்போது சமகால பிரதமர் பல அமைச்சுக்களை தன்னகத்தே கொண்டுள்ளார்.

இதில் இளைஞர் விவகார அமைச்சராகவும் ரணில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

69 வயதான ரணில் விக்ரமசிங்க இளைஞர் அமைச்சினை பெற்றுக்கொண்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சு பதவி தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களே இல்லையா என கேள்வியெழுப்பியுள்ளார்.

தேசிய கொள்கை, பொருளாதார, தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.