மைத்திரியின் செயற்பாட்டுக்கு ஊடக அமைப்பு எதிர்ப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டுக்கு ஊடக அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் அமைப்பு இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதான இலத்திரனியல் ஊடகங்கள் இந்தநிகழ்வினை நேரலையாக வழங்க ஆயத்தங்கள் செய்திருந்த போதிலும், ஜனாதிபதி ஊடகங்களை தணிக்கை செய்திருந்தார் என குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக பிரதமர் ரணில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் உள்ளிட்டவர்களை திட்டும் காணொளியொன்றை மட்டும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கைகளாகவே கருதப்பட வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.