மைத்திரிக்கு எதிராக ரணில் வகுத்துள்ள வியூகம்! குழப்பத்திலும் தொடரும் அமைச்சரவை சிக்கல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து அமைச்சர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும், அமைச்சர்களை நியமிப்பதில் ஜனாதிபதிக்கு உடன்பாடில்லாத சிலருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தக் குழப்பத்தை தீர்க்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு அமைச்சரவை பட்டியலை மைத்திரியிடம் அனுப்பியிருந்தார். எனினும் ஜனாதிபதி அதில் இருந்த சிலரின் பெயரை நீக்கிவிட்டு சிலருக்கு மாத்திரமு அமைச்சரவை ஒதுக்கியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தச் செயலுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.

எனினும் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.