மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வியாழேந்திரன் எம்.பி

Report Print Vethu Vethu in அரசியல்

வட மாகாண அபிவிருத்தி அமைச்சு போன்று கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சும் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்றது.

இதன்போது பல அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். இதில் வட மாகாண அபிவிருத்தி அமைச்சும் அடங்கும்.

இது குறித்து வியாழேந்திரன் எம்.பி கருத்து வெளியிடுகையில்,

வட மாகாணத்திற்கு என்று அமைச்சு இருக்கும் போது, கிழக்கு மாகாணத்திற்கு என்று அமைச்சு இல்லை.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற வியாழேந்திரன், மஹிந்த அணியுடன் இணைந்து கொண்டு கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.