ரணில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தயார்! இலங்கையர்களுக்கு நன்மையா? தீமையா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புதிதாக பதவி ஏற்றுள்ள பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய வரவு செயலவுத்திட்டம் வரும் தை மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்பேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்வைக்கப்படும்.

எதிர்வரும் 4 மாத காலத்துக்குத் தேவையான நிதியை இடைக்கால நிதி அறிக்கை மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தும் விலைச் சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர்,

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைவாக உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்காக எரிபொருள் விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.