மைத்திரியை கொலை செய்யச் சதி! அமைச்சுக்களை தன்வசப்படுத்திய சிறிசேனா

Report Print Murali Murali in அரசியல்

தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கலைத்தேன் என சிறிசேன முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியை கொலை செய்வதற்கான கொலை சதி திட்டம் தொடர்பில் இந்தியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி தற்காலிகமாகவே சட்டம், ஒழுங்கு அமைச்சை தன்வசம் வைத்துள்ளார் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பிரபுக்கள் கொலைசூழ்ச்சி தொடர்பிலான விசாரணைகள் முடிவடையும் வரையிலேயே மேற்படி அமைச்சு ஜனாதிபதி வசம இருக்கும். அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியிடம் ஒப்படைக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.