படுதோல்வி அடைந்துள்ள மைத்திரி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Report Print Vethu Vethu in அரசியல்

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக கௌரமான முறையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரி, மக்களின் ஆணையை பெற்று ஜனாதிபதியானார்.

இந்நிலையில் சமகாலத்தில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாரிய பின்னடைவின் காரணமாக, மக்கள் மத்தியில் இருந்து செல்வாக்கு ஜனாதிபதிக்கு குறைவடைந்துள்ளது.

இதனையடுத்து ஐந்து வருட ஜனாதிபதி காலத்தை முழுமையாக நிறைவு செய்த பின்னர் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் குடும்பத்தினரும் இவ்வாறான ஆலோசனையை அவருக்கு வழங்கியுள்ளனர்.

இரண்டாவது தவணைக்கான ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டினை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

தற்போது மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி, குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

தற்போதைய நிலையில் இழந்து போன ஜனாதிபதியின் பிரபலத்தன்மையை அதிகரித்து அவர் கௌரவமாக ஓய்வு பெறுவதற்கு அவசியமான நடவடிக்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கு திட்டமிடுமாறு ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தற்போது தீர்மானித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என மஹிந்த ராஜபக்ச தீர்மானிப்பார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது உறுதியாகி உள்ளதாக தெரிய வருகிறது.

அந்த தேர்தலில் போட்டியிடாமல் ஓய்வு பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுளளது.

தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து பேசிய ஜனாதிபதி, தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.