மகிந்த வேண்டாம்! சர்வதேசத்திற்கு சுமந்திரன் எழுதிய கடிதம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மகிந்த ராஜபக்சவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சர்வதேச நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர்,

சர்வதேச சக்திகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கு கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்கு உள்நாட்டிலிருந்தும் பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க வேண்டாம் என அறிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீரென ஐரோப்பிய சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.