மீண்டும் நீதிமன்றத் தீர்ப்புக்குச் செல்லும் இலங்கை அரசியல்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள சுற்றாடல் அமைச்சில் இன்று தனது கடமைகளை பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும ஏற்றுக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த நாம் முயற்சி எடுத்தோம். இதன்படி, அமைச்சர்களுக்கான பட்டியலைத் தயார் செய்து ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம். ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார்.

அத்துடன், யாப்பில் தனி அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள 30 அமைச்சுக்கள் என்ற விடயத்துக்கு 28 பேரையே ஜனாதிபதி நியமித்திருந்தார்.

ஜனாதிபதி எடுத்துள்ள அமைச்சையும், பிரதமர் எடுத்துள்ள அமைச்சையும் சேர்த்தே 30 என ஜனாதிபதி கருத்தில் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து முரண்பாடு உள்ளது. இது குறித்தே நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளோம் என்றார்.

Latest Offers