எதிர்கட்சி தலைவரின் செயலாளரின் பெயர் பரிந்துரை!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக குழப்ப நிலை நிலவும் இந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவருக்கான செயலாளரின் பெயரை அமைச்சரவை கருத்திற்கொள்ள விருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தின் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி தலைவரின் செயலாளராக நியமிக்கக் கூடிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரியொருவரின் பெயரை சிபாரிசு செய்து அமைச்சரவைக்கு அனுப்புவது வழக்கம். இதனை நாம் செய்துள்ளோம்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக சாதகமான தீர்மானம் கிடைக்குமென நாம் எதிர்பார்க்கிறோம். நாம் அனுப்பிய பெயர் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டால் புதிய எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஷபக்ஷவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக கருதப்படும்.

அவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் கொழும்பு - 07 மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு செல்ல முடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சபை கூட்டம் கடந்த 21ஆம் திகதி நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ஷ பிரதமருடன் அமர்ந்திருந்தார். எனவே இந்த விடயம் விரைவில் தீர்வுகாணப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை தானே இன்னும் எதிர்க்கட்சி தலைவர் என்று கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தொடர்ந்தும் கொழும்பு 07 இலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நிலைபெற்றுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை தீர்மானிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தமாக தொடர்பு கொண்டு எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி கூடுகிறது.

Latest Offers