மைத்திரியின் பலே திட்டம்? அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கொழும்பு அரசியல்

Report Print Murali Murali in அரசியல்

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, கட்சியினரை தயார்ப்படுத்தும் வகையில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்தாண்டு தேர்தலுக்கு தயாராகும் படி கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைகின்றது. எனினும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி, தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம் என அந்த தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

அத்துடன், நாடாளுமன்றை கலைத்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உச்சநீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு நடத்துவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம்” என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers