துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சாகல

Report Print Nivetha in அரசியல்

அமைச்சர் சாகல ரத்னாயக்க துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது துறைமுக அதிகாரசபை தலைவரின் அலுவலகம், ஹாபர் மாஸ்டர் அலுவலகம் (Harbour Master Office) , Pilot Station முனையத்தின் நிர்வாக கட்டடம் உள்ளிட்ட துறைமுகத்தினுள் உள்ள பல இடங்களை அமைச்சர் கண்காணித்துள்ளார்.

இதில் இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ அத்தியட்சகர் அத்துல ஹேவாவித்தாரன, இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு அத்தியட்சகர் ஜயந்த பெரேரா உள்ளடங்கலாக நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.