மஹிந்த தொடர்பில் ரணிலின் முக்கிய கோரிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்த ராஜபக்ச பிரதமராக மற்றும் நிதி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அனைத்து பிரிவுகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய நிதி அமைச்சு உட்பட பொருளாதாரத்துடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் புதிதாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையை ஒப்படைத்த பின்னர் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு தொடர்பில் பிரதமரினால் தீர்மானிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.