ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி! வெளிவந்துள்ள உண்மை

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனவரி மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இரண்டு கட்சிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் கூட்டணி அமைக்க உள்ளதாக சிலர் வெளியிட்டு வரும் தகவல்களில் எந்த உண்மையுமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சில விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும் இரண்டு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வ மட்டத்திலான எந்த பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் சுப நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையிலான கூட்டணி குறித்த உடன்பாடு ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் தொடர்ந்தும் கூறப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அரசியல் ரீதியாக செல்லா காசாக மாறியுள்ளார் என்பது சிறுப்பிள்ளையும் அறிந்த விடயம் எனவும் இப்படியான பின்னணியில் ஓட முடியாத குதிரையை போட்டியில் ஈடுபடுத்தி தோல்வியடைவது மட்டுமல்ல, அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ளும் தேவை தமக்கில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.