இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்! இது ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கில் இராணுவ முகாம்களை அப்புறப்படுத்துவது சம்பந்தமாக கேள்வி எழுப்புவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றால், தற்போது ஆட்சியில் இருப்பது அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் என்பதால், எவரும் குழப்பமடைய தேவையில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவ முகாம்களை அகற்றுவதை தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர் என்றால் அது நல்லது தானே. அதனை தானே எதிர்பார்க்கின்றோம். யார் அது பற்றி பேசுகின்றனர்?. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியா?.

அந்த கட்சியின் தலைவர் யார்?. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது அவரது அரசாங்கம். என்ன கூறினாலும் அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம்.

இதனால், எவரும் குழப்பமடைய வேண்டாம். பிரச்சினையில்லை” என மனோ கணேசன் கூறியுள்ளார்.அத்துடன் இரா.சம்பந்தனையே தான் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.