நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் துரித கிராம எழுச்சி திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியில் பெரியபளை, கச்சார்வெளி இணைப்பு வீதியின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட குறித்த வீதி வட்டார உறுப்பினரும், பச்சிலைப்பள்ளி உப தவிசாளருமான மு.கஜனின் வேண்டுகோளுக்கிணங்க புனரமைக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட வீதியை பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் கஜன் மற்றும் உறுப்பினர்களான ரமேஷ், வீரபாகுதேவர், கோகுல்ராஜ் ஆகியோருடன் கிராம அமைப்புக்களும் கலந்து கொண்டுள்ளன.