கிண்ணியா பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

திருகோணமலை - கிண்ணியா பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிண்ணியா, பிரதேசசபையின் மண்டபத்தில் தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸ் தலைமையில் நேற்று சபை அமர்வு ஆரம்பமானது.

வரவு செலவு திட்டத்துக்கான முன்மொழிவுகளை தவிசாளர் சபையில் சமர்பித்தார்.

தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வரவு - செலவு திட்ட உரையின் பிரகாரம் வரவு - செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் தவிசாளருக்கு பூரண ஆதரவுடனான ஏனைய சக கட்சிகளின் ஒத்துழைப்பினால் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.