ஆதிவாசிகளை விளையாட்டுத் துறைகளுக்குள் உள்ளீர்க்க வேண்டும்: கிழக்கு மாகாண ஆளுநர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிழக்கில் ஆதிவாசிகளுக்கான விளையாட்டுக்களை உருவாக்கி அவர்களையும் விளையாட்டுத் துறைகளுக்குள் உள்ளீர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற 44ஆவது தேசிய விளையாட்டில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

ஆசிய நாடுகள் உள்ளடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை இனங்கண்டு விளையாட்டு வீரர்களை தயார்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணம் மாற்றமடைய வேண்டும். கல்வி விளையாட்டு துறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு உரிய மாகாண பணிப்பாளர்களுக்கு காணப்படுகிறது.

சரியான திட்டங்களை வகுத்து வளங்களை இனங்கண்டு மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

முறைசார்ந்த வழிகாட்டல்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதன் ஊடாக வெளிநாட்டுப் பயிற்சிகளை பெறக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து விளையாட்டுத் துறையில் கிழக்கு மாகாணம் அடைந்த அடைவுகளை மதிப்பீடு செய்து எதிர்வரும் காலங்களில் சர்வதேசத்திலும் விளையாட்டுக்கான களங்களை பயிற்சியாளர்கள் வழங்குவதற்கான புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

மூலவளங்கள் பற்றாக்குறையாகவுள்ளது. முதலீடுகளை அதிகரிக்க கிழக்கில் குழுவொன்றை ஸ்தாபிக்க எண்ணியுள்ளேன் மத்திய அரசாங்கத்தினுடைய உதவிகளும் தேவைப்படுகிறது.

கிழக்கில் 3 இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், 20,000 மேற்பட்ட ஆசிரியர்கள், 17 கல்வி வலயங்கள் காணப்படுகிறது.

பாடசாலை மட்டங்களிலும் விளையாட்டு வீர வீராங்கனைகளை இனங்கண்டு கொண்டு மேலும் பயிற்சியுடனான திறம்படக்கூடிய வாய்ப்புக்களை அதிகரிக்க எண்ணியுள்ளோம்.

கிழக்கில் ஆதிவாசிகளுக்கான விளையாட்டுக்களை உருவாக்கி அவர்களையும் விளையாட்டுத் துறைகளுக்குள் உள்ளீர்க்க வேண்டும் வாகரை, மக ஓயா போன்ற பகுதிகளில் தமிழ், சிங்கள ஆதிவாசிகள் வாழ்கின்றார்கள்.

பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி ஊடாக சுடுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்க முடியும் எதிர்வருகின்ற மார்ச் மாதத்தில் குறைந்தது 12 ஆதிவாசிகளையாவது தன்னிடம் அழைத்து வருமாறும் அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers