அரசியலமைப்பு மீறப்படாமல் தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளது: சுமந்திரன்

Report Print Sumi in அரசியல்

அரசியலமைப்பு மீறப்படாமல் தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசியலமைப்பு வரைபை தடுப்பதற்காகவே ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளார்.

குறித்த செயற்பாட்டின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் நின்று செயற்பட்டது. இந்த செயற்பாட்டில் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றதாக ஒரு விமர்சனமும் உள்ளது.

நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைகின்றதாக அல்லது சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைகின்றதாக இருந்தால், மிகவும் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்.

ஆகையினால், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைவதை ஏற்க முடியாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசியலமைப்பு மீறப்படுகின்ற போது, அது மீறப்படாது தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.