அமைச்சராக இருந்த நான் தற்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அமைச்சர்களின் துறைகள் சம்பந்தமான பணிகளை எந்த சிரமங்களும் இன்றி முன்னெடுத்து செல்ல சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பதவி இருப்பதோ இல்லாமல் இருப்பதோ பிரச்சினையாக எடுத்து கொள்ளக்கூடாது.

கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்தேன். தற்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்.

எனினும் வேலைகளை செய்வதை நான் நிறுத்த போவதில்லை. அமைச்சராக இருந்த போது போதுமான பணிகளை ஆற்றினேன்.

புதிய அமைச்சர்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் முழுமையான ஆசியையும், ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.