கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள புதிய அமைச்சர்

Report Print Sujitha Sri in அரசியல்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய அமைச்சரான ராஜித சேனாரத்ன திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலொன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், அமைச்சர் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் சுகாதார பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அவர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீ கந்தராஜா, வைத்திய கலாநிதி சிவமோகன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.