பாதாள உலக குழுக்கள் தலை தூக்கவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்கி உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனடியாக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நாட்டில் பாதாள உலக குழுக்கள் தலைதூக்கி உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹேஷா விதானகே,

ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபித்து புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், நாட்டின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், நாட்டில் நடைபெறும் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பாதாள உலக குழுக்கள் தலைத்தூக்க அரசாங்கம் இடமளிக்காது. ஜனாதிபதியிடம் தற்போது பொலிஸ் துறை உள்ளது.

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாக கடந்த காலங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளியாகிய போதிலும் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இன்னும் அந்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது குறித்து எமக்கும் சின்ன சந்தேகம் உள்ளது.

இந்த திரைக்கதைக்கு பின்னால் என்ன இருக்கின்றது என்பதை கண்டறிவது முக்கியமானது குறிப்பிட்டுள்ளார்