தேர்தலில் தோல்வி அடைவோம் என நினைப்பவர்கள் தான் தேர்தலினை எதிர்க்கின்றனர்: மஹிந்த

Report Print Malar in அரசியல்

தேர்தலில் தோல்வி அடைவோம் என நினைப்பவர்கள் தான் தேர்தலினை எதிர்க்கின்றனர் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை, ஹுங்கம பிரதேசத்தில் இன்று காலை மத வழிப்பாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாடு தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளது. யார் வேண்டுமானாலும் ஜனாதிபதி ஆகலாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல சிலர் கட்டாயப்படுத்துகின்றார்கள்.

தேர்தல் கேட்க பயப்படுபவர்கள், தேர்தலில் தோல்வி பெறுவோம் என நினைப்பவர்கள் தான் தேர்தலினை எதிர்க்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லை என்பது தொடர்பில் மிகுந்த கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.