சந்திரிகாவின் சூழ்ச்சி! ஒதுங்கியிருக்குமாறு அறிவுறுத்தும் மைத்திரி ஆதரவாளர்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போதைய அரசியல் விடயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் பொருத்தமானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது எமக்கு கடந்த காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது.

எனினும் பண்டாரநாயக்க பரம்பரைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே சந்திரிக்கா பண்டாரநாயக்க கடந்த காலங்களில் நடந்துக்கொண்டார். அபிவிருத்தி அடைந்து வந்த நாட்டை அழிக்க அவரே சூழ்ச்சி செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அந்த கட்சியை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும் நேரத்தில், அதில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசியலில் ஈடுபடும் காலம் முடிந்து விட்டது. அவரது கோபம், பகை, விரோதம் காரணமாக நாட்டு மக்களே துன்பத்தை அனுபவித்து வருகி்ன்றனர்.

இனிமேலாவது சந்திரிக்கா ஒதுங்கி இருக்க வேண்டும். அவருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேர் செல்லவிருப்பதாக கூறுகின்றனர். சோறு சாப்பிடுவோர் அவருடன் செல்ல மாட்டார்கள். புல்லை உண்பவர்கள் அவருடன் செல்வார்கள் என எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.