மைத்திரியின் தீர்மானத்தை சரியென்று சொன்னவர் இப்போதும் பதவியில்! கடுமையாக விமர்சித்த தேரர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றத் தீர்ப்பினை கேட்ட பிறகும் பதவியிலிருக்கும் சட்டமா அதிபரின் செயல்பாட்டை சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் விமர்சித்துள்ளார்.

நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக பேசிய தேரர்,

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியல் யாப்பின் பிரகாரம் சரியானது என சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கின்றார். நீதிமன்றமோ சட்ட ரீதியற்றது என தீர்ப்பு வழங்குகின்றது. சட்ட மா அதிபர் இந்த இடத்தில் பொய்யுரைத்துள்ளார்.

சட்ட மா அதிபர் கூறுவதெல்லாம் சரியானது அல்ல என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

இதேபோன்றுதான், பொதுபல சேனா பொதுச் செயலாளர் விடயத்திலும் சட்ட மா அதிபர் முன்வைத்துள்ள சட்ட ஆதாரங்கள் தவறானவையாக இருக்கலாம்.

உண்மையில், நான் சட்ட மா அதிபராக இருந்தால் அன்று நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஐந்து நிமிடம் கூட அந்த பதவியில் இருந்திருக்க மாட்டேன் என்றார்.