மன அழுத்தத்தை போக்க தாய்லாந்தில் மைத்திரி செய்யும் செயல்!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில் தாய்லாந்தின் வெஹேர விகாரைக்கு குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தாய்லாந்திலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.

நாட்டில் அரசியல் குழப்பம் தணிந்த நிலையில், அவசரமாக ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தார்.

கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மைத்திரி, ஆன்மீக ரீதியாக வழமைக்கு திருப்ப எதிர்பார்த்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் தனது பொழுதுகளை தாய்லாந்தில் செலவிட்டு வரும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.

Latest Offers