ஞானசார தேரருக்காக குரல் கொடுக்கும் சர்ச்சைக்குரிய மியன்மார் பௌத்த பிக்கு

Report Print Kamel Kamel in அரசியல்

மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு அஷின் வீரது, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்காக குரல் கொடுத்துள்ளார்.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய 969 என்ற இயக்கத்தைச் சேர்ந்த அஷின் வீரது, ரோஹினிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எண்ணிக்கையிலான ரோஹினியர்கள் படுகொலை செய்யப்பட்டிடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய போராட்டத்திற்காக உயிரையும் சுதந்திரத்தையும் பணயமாக வைத்து போராடி வரும் ஞானசார தேரர் குறித்து பெருமிதம் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசியத்திற்காக தன்னுயிரை அர்ப்பணிக்கும் நபர்களை மக்கள் கௌரவிப்பார்கள் எனவும், அவர்களை வீரர்களாக போற்றுவார்கள் எனவும் சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அது பெருமைப்பட வேண்டிய விடயம் எனவும் வீரது தேரர் தெரிவித்துள்ளார்.

சரியானதிற்காக போராடும் நபர்கள் முதலில் குற்றவாளி என்றாலும் இறுதியில் வெற்றியீட்டுவார் எனவும், ஞானசார தேரரே இலங்கையின் வீரராவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டுமென வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Latest Offers