ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக்கட்சியின் 25 அமைப்பாளர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 25 தொகுதி அமைப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த தயாராகி வருகின்றனர்.

இவர்களை எம்முடன் இணைத்துக் கொண்டு ஜனநாயகத்தை வலுப்படுத்தி பலமிக்க கூட்டணியை உருவாக்குவோம்.

இதன் ஊடாக மக்கள் தொழில் வாய்ப்புகளை கோரி, ஆட்சியாளர்களுக்கு பின்னால் ஓடுவதற்கு பதிலாக தகுதியின் அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிலைமையை ஏற்படுத்துவோம்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க அனைத்து தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே பதவி வகிக்க முடியும்.

பிரதமரால் அரசியலமைப்பு சட்டத்தை மீற முடியாது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.