அரச ஊழியர்கள் இவ்வாறு செயற்பட வேண்டும்!

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

தாய் நாட்டை நிலையான அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைக்க அரச ஊழியர்களாகிய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிமித்தம் அரசாங்க சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நாம் அனைவரும் அவரவருக்கு வழங்கப்பட்ட கடமை மற்றும் பொறுப்புக்களை செவ்வனே செய்தல் வேண்டும்.

அதன்போது யாரையும் எவரும் கண்காணிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தான் முன்னேற வேண்டும் என்ற நிலையோடு பிறரின் அபிவிருத்திக்கு உதவ கூடியவர்களாக மாறும் போது நாடு அபிவிருத்தி பாதையில் பயணிக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers