வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு - முன்னாள் பிரதி பதிவாளர் நாயகத்திடம் சாட்சி பதிவு

Report Print Steephen Steephen in அரசியல்

போலியான தகவல்களை முன்வைத்து, ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜானகி ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் சந்தேக நபரான சஷி வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இன்றைய தினம் ஓய்வுபெற்ற பிரதி பதிவாளர் நாயகம் சுமதிபால ஹெட்டியராச்சியிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து வழக்கு விசாரணைகளை நீதவான் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

போலி தகவல்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதன் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தை சந்தேக நபர் செய்துள்ளதாக குற்றம் சுமத்தி, குற்றப் புலனாய்வு திணைக்களம், சஷி வீரவங்சவுக்கு எதிரான இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

Latest Offers