சட்டத்தை அவமதிக்கும் மகிந்தவின் மூத்த புதல்வர்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமலுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கின் நிபந்தனை ஒன்றின் அடிப்படையில், நாமல் ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்ற நாமல், நேற்றைய தினமும் அரைக்கால் சட்டை அணிந்தே சென்றிருந்தார்.

இதற்கு முன்னர், நாமல் ராஜபக்ச இவ்வாறான உடையில் சென்றிருந்தமை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தனது தந்தை பிரதமராக நியமிக்கப்பட்டதும் நாமல் ராஜபக்ச இவ்வாறு அரைக்கால் சட்டையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்றிருந்தார்.

Latest Offers