அவசரமாக பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: அஜித் பீ பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தை அவசரமாக கலைத்து, பதவிக்காலம் முடியும் முன்னர் பொதுத் தேர்தலை நடத்த எந்த எண்ணமும் கிடையாது என டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

அவசரமாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை.

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக ஆட்சியில் இருக்கும் எனவும் அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அவசியமற்றது எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers