புதிய ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

புத்தாண்டில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்றப் பின்னர், கடந்த 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதுடன் அது 20 நிமிடங்களுக்குள் முடிவடைந்தது.

அந்த நேரத்தில் அமைச்சர்களுக்கான துறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும் இடையில் துறைகள் சம்பந்தமான இழுபறி நிலை காணப்படும் சூழலில் நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers