இலங்கைக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உதவியை பெறும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புகள்

Report Print Steephen Steephen in அரசியல்

மனித உரிமை மீறல் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உதவியை பெற்றுக்கொள்ள புலம்பெயர் அமைப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் லண்டன் நகரை மையமாக கொண்ட உலக தமிழர் பேரவை, வி. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன இலங்கைக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உதவியை பெற முயற்சித்து வருகின்றன.

இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை சம்பந்தமாக உலக தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், அண்மையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 10வது அறையில், தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோய்பன் மெக்டோனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் உலக தமிழர் பேரவையின் எஸ். யோகலிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரான அம்பானி சீவரத்தனம் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் ஸ்கைப் தொழிற்நுட்பம் வழியாக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை குறித்து இவர்கள், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் ராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

Latest Offers