அமைச்சர் நவீன் நாடு திரும்பியதும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் பழநி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால், அவர் நாடு திரும்பியதும் உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 500 ரூபாய். இதனை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனததிற்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். சம்பள அதிகரிப்பு தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தினால், உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.