இப்போது வழி நடத்திக் கொண்டிருப்பது மகிந்த தான்! பசில் பதில்

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே வழிநடத்தி வருவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடனேயே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி உருவாக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளிப்படைத்தன்மையுடைய கட்சியாக இயங்கும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவா தெரிவித்துள்ளார்.

மகிந்த பொதுஜன முன்னணியுடன் பேணி வரும் உறவுகள் குறித்து ஏனைய கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதுடன், நாடாளுமன்ற உறுப்புரிமை வகிக்க தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.