வறுமையை ஒழிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்! ஜனாதிபதி

Report Print Murali Murali in அரசியல்

வறுமையை ஒழிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

போதைப் பொருள் உள்ளிட்ட சமூகத்திற்கு அழிவு ஏற்படுத்தக் கூடிய காரணிகள் தொடர்பல் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு குறித்த திட்டங்கள் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது.

நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு புத்தாண்டில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.