எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார்! பசில் அதிரடி அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, எதிர்வரும் நாட்களில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

“2018ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். மக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவை தந்து வெற்றிபெற வைத்தார்கள்.

இந்த நிலையில் புது வருடத்தையும் தேர்தல் வருடம் என கூறியவர்களும் நாங்களே. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் பொதுஜன பெரமுண கட்சி வெற்றி பெறும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers