மைத்திரிக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டேன்! ரணில் பக்கம் சென்றவர் கருத்து

Report Print Murali Murali in அரசியல்

எந்த சந்தர்ப்பத்திலும் கட்சிக்கோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்திற்கோ எதிராக செயற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய விஜித் விஜேமுனி சொய்சா, ஐக்கிய தேசிய கட்சி தயாரித்திருந்த அமைச்சரவை பெயர் பட்டியலிலும் இணைக்கப்பட்டிருந்தார்.

எனினும், ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சென்றவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதில்லையென அறிவித்ததனால் இவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.