மைத்திரியை நேரில் சந்தித்து முக்கிய சில இரகசியங்களை சொல்ல வேண்டும்! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் நாமல்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து கொலை சதி குறித்த மிக முக்கிய இரகசிங்களை தெரிவிக்க வேண்டியுள்ளதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் தலைவரான நாமல் குமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கு தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தில் இன்று கடிதம் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரபுக்கள் கொலை சூழ்ச்சி தொடர்பில் வெளிப்படையாக கூறமுடியாத சில தகவல்களை ஜனாதிபதியை நேரில் சந்தித்து சொல்ல வேண்டும்.

அதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொண்டிருக்கின்றேன். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் நான் உயிரிழந்தாலும் பரவாயில்லை.

சம்பந்தப்பட்ட தரப்புக்கு தகவலை வழங்கிய திருப்தியாவது ஏற்படும். இந்நிலையில், தான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தரவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி கொலை சதி குறித்து நாமல் குமார வெளியிட்டிருந்த கருத்து நாட்டில் பெரும் சரச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers