மஹிந்தவின் சகோதரருக்கு பதிலடி கொடுத்த ஹர்ஷ டி சில்வா

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு தோறும் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பித்து வரும் ஓர் கட்சியாகும் என கட்சியின் பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே முதல் தடவையாக தேர்தல் ஆணையாளரிடம் கட்சியின் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக அண்மையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிடும் போதே கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக தாமே கணக்கு அறிக்கைகளை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச பிழையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி ஒவ்வொரு ஆண்டும் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers