மைத்திரி தலைமையில் இன்று அமைச்சரவை! கடுமையான உத்தரவுகளுடன் ஜனாதிபதி

Report Print Vethu Vethu in அரசியல்

புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 20ஆம் திகதி அமைச்சரவை நியமிக்கப்பட்டது.

அன்றைய தினம் சிறிய அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில் அங்கு இடைக்கால கணக்கறிக்கைக்கு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

எனினும் அன்றையதினம் அமைச்சர்களின் பொறுப்புகள் மற்றும் பணிகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அமைச்சர்களின் அமைச்சுகள் தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி வெளியான பின்னர் இடம்பெறும் முதலாது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

இன்றைய கூட்டத்தின் போது ஜனாதிபதி பல கடுமையான உத்தரவுகளும் கட்டுப்பாடுகளையும் விதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.